மதுரை - மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக மாமன்ற உறுப்பினர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணா மாளிகை கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்களுக்கான மாதாந்திரக் கூட்டம் மேயா் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த 67 மாமன்ற உறுப்பினர்களில், ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் மக்களுக்கான குறைகளை பேசாமல் புறக்கணித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை, கோவையை அடுத்து மதுரை மாநகராட்சியிலும் மேயருக்கு எதிராக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது 

Night
Day