தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
மதுரை உசிலம்பட்டி கீழப்புதூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளைத் தேவர் தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...