மதுரை: ஆட்சியர் புறக்கணிப்பதாக கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை சிறைபிடித்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். கடந்த 31ஆம் தேதி, மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது, பிப்ரவரி 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதால், இன்று மாற்றுத் திறனாளிகள் வருகை புரிந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்சியர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களை புறக்கணிப்பதாக கூறிய மாற்றுத் திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஆட்சியரின் காரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day