மதுரை: கள்ளழகர் மீது மோட்டார் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது உயரழுத்த மோட்டார்களை பயன்படுத்தி, தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கள்ளழகர் மலையில் இருந்து இறங்கி வரும் வழிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது என்றும், ஆற்றில் இறங்கும்போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார். பாரம்பரிய முறையில் தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்றும், அதற்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day