தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வனத்துறையின் குளறுபடியால் 200 டன் நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள கூராங்குளம் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதி அருகிலுள்ள வடகரை கிராமத்திலும் உள்ளது. வனத்துறை ஏலம் விட்டதன் பேரில், கீழக்கோட்டை பகுதியில் உள்ள 200 டன் நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறி, கீழக்கோட்டை பஞ்சாயத்து தலைவரும், கூராக்குளம் கண்மாய் பாசனகமிட்டி தலைவரும் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். தங்களிடம் தீர்மானம் வாங்காமல், மரங்களுக்கு சம்பந்தமில்லாத வடகரையில் தீர்மானம் வாங்கி மரங்கள் வெட்டப்படுவதாக குற்றம் சாட்டிய கீழக்கோட்டை கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஆட்சியர் உத்தரவுபடியே நடந்து கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...