மதுவை ஒழிப்பதாக பேசும் விளம்பர அரசு : திமுக நிகழ்ச்சியில் மதுவுடன் கூடிய அசைவ விருந்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுவை ஒழிப்பதாக பேசும் விளம்பர அரசு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில்  மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்ற வீடியோ வைரலாகி மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் திமுக உறுப்பினர்கள் தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடி பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பின்னர் திமுகவினர் 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் பீர் பாட்டில்களை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு இலையிலும் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக பீர் பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

மதுவை ஒழிப்பதாக பேசும் விளம்பர அரசு, திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day