மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை, பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் திண்டுக்கல் பகுதியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனி,ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊரான மாங்காட்டிற்கு வந்து விட்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கெடிலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த 3  பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகாத வார்த்தைகளை பேசியவாறு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சஞ்சீவியின் காரை துரத்திச் சென்றதால் காரில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனால் பயந்து போன சஞ்சீவியின் மனைவியும் குழந்தைகளும் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.  மேலும், போதை நபர்கள் 3 பேரும் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை பார்த்துவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கெடிலம் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 3 பேரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரா‌ஜேஷ், ராஜா, வினோத் என்பது தெரிந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Night
Day