மத்திய, மாநில அரசைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே புதிய கூலி உயர்வு ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி உரிமையாளர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும்,  மின் கட்டண உயர்வில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சோலார் பேனல் திட்டத்தை 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுவரை 32 முறை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகும் கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை எனவும், விசைத்தறி உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Night
Day