மத்திய குழு இன்று சென்னை வருகை - நாளை முதல் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், புயல், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று வருகை தரவுள்ளது. 

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பினை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழு, இன்று சென்னை வருகிறது. தொடர்ந்து, நாளை பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினர், வரும் திங்கட்கிழமை புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர். 

Night
Day