எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற கோடீஸ்வரன் இல்லத் திருமண விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு, மன்னார்குடி சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடுவூர் பகுதியில் பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் திரண்டு நின்று, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருபுவனம் ஆலயம் ஆகியவற்றின் சார்பில், சின்னம்மாவுக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கழக நிர்வாகி ராஜா, எடமலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மன்னார்குடி எல்லையான காளவாக்கரை பகுதியில் கழக நிர்வாகிகள் சுஜய், செல்வம், சரவணன், இளவரசி இளையராஜா மற்றும் திரளான கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் மற்றும் பட்டாசுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார்குடியில், சோழா திருமண அரங்கில் நடைபெற்ற திருமண விழாவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தார். மணமக்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மணவிழாவில், கோடீஸ்வரன் மகன் K. அபினேஷ் - R. உத்ரா லட்சுமி தம்பதியினருக்கு, புரட்சித்தாய் சின்னம்மா, திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். தொடர்ந்து, மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, அட்சதை தூவி ஆசீர்வதித்தார்.