மன்னிப்பு கோரினார் இயக்குநர் மிஷ்கின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாட்டில் ராதா திரைப்படத்தின் ஆடீயோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பானு மற்றும் பேட் கேர்ள் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் மிஷ்கின், வெற்றி மாறன் போன்ற ஆளுமை தனது படத்தையும் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். ​கடந்த வாரம் பாட்டில் ராதா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தவறாக பேசியதற்காக பாடலாசிரியர் தாமரை, லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் தாணு உள்ளிட்ட பலரிடம் மிஷ்கின் மன்னிப்பு கோரினார்.


Night
Day