மயிலாடுதுறையில் கெட்டு போன அரிசியில் சத்துணவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சமைக்கும் சத்துணவு அரிசி கெட்டுப் போய், பூஞ்சையுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

காட்டுச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சத்துணவு சமைப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி பச்சை நிறத்தில் பூஞ்சை பிடித்து சமைப்பதற்கு தரமற்று உள்ளது. இந்த நிலையில், தரமற்ற அரிசியை மாணவ மாணவிகள் தாம்பாளத்தில் ஏந்தியபடி சமையல் கூட வாசலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், அதில் பொதுமக்கள் ஒருவர் கண்டனம் தெரிவித்து பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. 
மேலும் தரமற்ற இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும், இதுதான் திராவிட மாடல் அரசா? என்றும் அவர் விளம்பர திமுக அரசுக்கு கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day