மயிலாடுதுறையில் நிவாரணம் வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். எரவாஞ்சேரி, இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காத நிலையில், விளம்பர அரசும் நிவாரணம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இலுப்பூர் சங்கரன்பந்தல் கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

Night
Day