மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பேச்சால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம் என தெரிவித்திருந்தார். ஆட்சியரின் பேச்சு  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆட்சியர் மகாபாரதியை பணிமாற்றம் செய்து, அவருக்கு பதிலாக ஈரோடு நகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Night
Day