மயிலாடுதுறை: கோயில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட அபயாம்பிகை யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை, நீச்சல் குளத்தில் ஆனந்த குளியிட்ட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை எனும் 56 வயது யானை குளிப்பதற்கு ஷவர் பாத்துடன் கூடிய பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்று கோயில் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது. தற்போது மயிலாடுதுறையில் வெயில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அபயாம்பிகை யானை நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் ஆனந்த குளியலிட்டது. இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள், யானை குளியலிட்டதை தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

varient
Night
Day