மயிலாடுதுறை: கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதாக கூறி சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வருடத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதாக கூறி பட்டியிலின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்மங்குடி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு, மண்டகப்படி எனப்படும் அபிஷேக ஆராதனைகள் அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களால் செய்யப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு பட்டியலின மக்கள் மண்டகப்படி செய்யக்கூடாது என்று மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்டோர் நமச்சிவாயபுரம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு உண்டான உரிமைகள் மறுக்கப்பட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Night
Day