மயிலாடுதுறை: பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி பிளாட் போடுவதற்கு எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே 35 அடி ஆழ பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை நிரப்பி, பிளாட் போடுவதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 35 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அந்த பள்ளத்தில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்தை வாங்கிய செந்தில் என்பவர், குப்பைகள் கொட்டப்பட்ட பள்ளத்தை சமன்செய்து பிளாட் போடுவதற்காக, பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை, லாரிகள் மூலம் கொட்ட முற்பட்டார். இதனையறிந்த கிராம மக்கள், பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை நிரப்பி, பிளாட் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகனங்களை சிறைப்பிடித்தனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Night
Day