தமிழகம்
யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்துக - திமுக அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்...
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
மயிலாடுதுறை பேராவூர் பகுதியில் சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதியினர் தெரிவித்ததன் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2-ம் தேதி மயிலாடுதுறை நகருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை சிக்காத நிலையில், காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை தென்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் ஆற்றோரங்களில் கூண்டுகள் வைத்தும் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். தேடுதல் வேட்டை 6வது நாளாக தொடரும் நிலையில் அருகிலுள்ள பேராவூர் பகுதியில் நேற்று இரவு சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...