மயிலாடுதுறை: 14 நாட்களுக்கு பின் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறையினர் திணறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். குறிப்பாக கடந்த 2ம் தேதி செம்மங்குளம் பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கிடைத்த தகவலின்பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை புலி தென்பட்டதாகவும், தன்னை துரத்தியபோது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை விரட்டியதாகவும் கட்டட தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்துள்ள வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

Night
Day