மருத்துவமனையில் தீ விபத்து - 6 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 4 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சைக்கு உடனிருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் கொழுந்து வி்டடு எரிந்த தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் லிப்டில் சிக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சிக்கியவர்களை மீட்பதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனையின் மற்றோரு லிப்டில் சிக்கியிருந்த சிறுவன் உட்பட 8 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day