மறைந்த மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான குமரி அனந்தனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான, இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் குமரி அனந்தனின் மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார். 

Night
Day