மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரத்தில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளுடன், சேதமடைந்த பாலத்தையும் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தர்கா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day