மாஞ்சோலை குடியிருப்புகளை காலி செய்யவேண்டாம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் யாரும் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பி.பி.டி.சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தங்கள் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய வேண்டுமென ஏற்கனவே பி.பி.டி.சி நிறுவனம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அங்குள்ள தொழிலாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் இருந்து தொழிலாளர்களை கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பி.பி.டி.சி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படி, 3 நாட்களில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்து 75 சதவீத கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை யாரும் வீடுகளை காலி செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day