மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரின் நினைவு தினம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதி முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது போலீசார் நடத்திய கடுமையான தடியடியில் தாமிரபரணி ஆற்றுக்குள் 3மூன்று வயது சிறுவன் உள்ளிட்ட 17 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் 25 ஆவது தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதுமே சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Night
Day