மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியை சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், தனது சொந்த செலவில், பள்ளியில் பயிலும் மாணவர்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரம் பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் நெல்சன் பொன்ராஜ், தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர், தற்போது, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, தனது பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் என 20 பேரை தனது சொந்த செலவில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நனவாக்கியுள்ளார். தலைமை ஆசிரியரின் இச்செயலை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

varient
Night
Day