மாணவர்கள் விவகாரத்தில் அரசியல் கூடாது - முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மாணவர்களின் நலன்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதிலும் ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் மதிப்புக்கு எதிரானது என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயங்களை விட தமிழக மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக முதலமைச்சருக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். 


Night
Day