மாணவிக்கு நீதி கேட்டு போராடிய பா.ம.க.வினர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த வந்த, சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். பாமகவினரின் போராட்டத்தை ஒட்டி வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Night
Day