மாணவியின் பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக் கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பரை தாக்கி விட்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னை பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அதன் பேரில் கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய குழுவினருடன் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும், வரும்காலங்களில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Night
Day