எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் குறித்த தகவல்கள் வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்களில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து, டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தர வைப்பேன் என்றும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்ஃபோனை எடுத்துக் கொண்டு, அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. தாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை என்றும், அடி பணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.