எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்ற திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால், சேலம் சரக துணை ஆணையர் எஸ்.பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த குழுவினர் இன்று தங்களது விசாரணையை தொடங்கிய நிலையில், பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.