மாண்புமிகு அம்மாவின் 8-ம் ஆண்டு நினைவுநாள் - கோடநாடு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேடில் 4 ம் நம்பர் கேட் பகுதியில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படம் முன்பு தோட்ட தொழிலாளர்கள், ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். அம்மாவின் இழப்பு தங்களுக்கு பேரிழப்பாக உள்ளதாக கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Night
Day