மாண்புமிகு அம்மாவின் 8 -ம் ஆண்டு நினைவு நாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

 முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் அவரது திருவுருவ படம் மற்றும் சிலைக்‍கு முன்னாள் தலைமை அரசு கொறடா பி.எம்.நரசிம்மன் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, ஒன்றிய கவுன்சிலர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை பி.எம்.நரசிம்மன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் கழக நிர்வாகிகள் ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Night
Day