மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் சாலையில் பெருக்‍கெடுத்து ஓடும் கழிவு நீர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரியமேடு மாநகராட்சி அலுவலகம் பின்புறம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

சென்னை பெரிய மேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் முக்கிய சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இப்பகுதியில் அருகிலேயே மாநகராட்சி அலுவலகம், பெரியமேடு காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் இருக்கக்கூடிய முக்கிய சாலையிலேயே கழிவு நீர் குளம் போன்று தேங்கி இருப்பது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day