மாநில பாடத் திட்டத்தில் அடுத்த மாதம் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அங்கீகாரம் பெறாத சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற மாணவர்கள் அடுத்த மாதம் அல்லது அக்டோபர் மாதம் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நடுவிக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் CBSE பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கான நுழைத் தேர்வு வராததால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஎஸ்இ-க்கான அங்கீகாரம் பெறாமல் பள்ளி இயங்கி வந்தது அம்பலமானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்கள் முற்றுகையிட்டனர். ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாநில பாடத் திட்டத்தில் அடுத்த மாதம் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் எழுத முடியும் எனக் குறிப்பிட்டார்.

Night
Day