மாமன்னர் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய சுதந்திரத்திற்காக, முதன்முதலில் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவனின் 309-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவன் காட்டிய அதே வழியில், ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்திற்காக, முதன்முதலில் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நெற்கட்டும் செவலை பூர்வீகமாகக் கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் என்ற பெருமைக்குரியவர் - ஆங்கிலேயர்களுக்கு அனைத்து குறுநில மன்னர்களும் பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்ததோடு, முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கியவர் மாமன்னர் பூலித்தேவன் என்பதை யாராலும் மறுக்கமுடியாது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்ட மாமன்னர் பூலித்தேவன், தனது நிர்வாக திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள் - மேலும், பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர் - ஒண்டிவீரன் பகடை மற்றும் வென்னிக்காலடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

மாமன்னர் பூலித்தேவன் காட்டிய அதே வழியில், ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day