மாமல்லபுரத்தில் கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு பயணி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு பெண் பயணி, அலையில் சிக்கி உயிரிழந்தார். இங்கிலாந்தை சேர்ந்த பரிகெட் டைலர் என்பவர், தனது மகன் ரூபர்ட் டைலருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். இருவரும் கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பரிகெட் டைலர், மகன் கண் முன்னே மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது உடல் கரை ஒதுங்கியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

varient
Night
Day