மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் சோமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை ரசித்து விட்டு கடற்கரைக்கு வந்து குளித்தனர்.  இதில் நண்பர்களான 2 பேர் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இருவரின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அதேபோல் சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனரான சீனிவாசனும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். 

Night
Day