மார்ச் 11ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,  விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும், அநேக இடங்களில் இயல்பில் இருந்து  2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் குறைந்த பட்சமாக 35 டிகிரி செல்சியசும், அதிக பட்சமாக 39 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. இதேபோன்று  தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்த பட்சமாக 32  டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.  இதேபோன்று சென்னை பொறுத்தவரையில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவினாலும் படிபடியாக வெப்பநிலை உயரக்கூடும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது. 

Night
Day