மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்‍குகள் கொல்கத்தாவுக்‍கு மாற்றியது சரி: சென்னை உயர் நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவுக்கு மாற்றியது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எதிரான வழக்குகளை கொல்கத்தாவுக்கு மாற்றி, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கொல்கத்தா வருமான வரித்துறை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மார்ட்டினின் நிறுவனம், மேற்கு வங்கம், நாகலாந்து, சிக்கம், பூட்டான் மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்து வருவதாலும், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி வழக்கை கொல்கத்தா வருமான வரித்துறைக்கு மாற்றியது சரியானது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

Night
Day