மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் கவீன் கேர், பிரீடம் அறக்கட்டளை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் கவீன் கேர் நிறுவனம் மற்றும் பிரீடம் அறக்கட்டளை இணைந்து 100 நபர்களுக்கு செயற்கை கால்களை வழங்கியது. 


கவின் கேர் நிறுவனம் தனது சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீராவின் வாக் இந்தியா என்னும் பிரச்சாரத்தை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை இந்நிறுவனம் வழங்கி இருக்கிறது. 


அதன் ஒரு பகுதியாக தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்‍கு செயற்கை கால்களை கவின் கேர் துணை தலைவர் சாய் வெங்கட்ராமன் மற்றும் பிரீடம் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் சங்கரன் ஆகியோர் வழங்கினர். 

Night
Day