மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சு - துரைமுருகன் பதவி பறிக்கப்படுமா...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், பதவி பறிபோகும் அச்சத்தில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு சிலர் தி.மு.க.,வை எதிர்க்கப் பார்ப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன்,  பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரை கொண்டு உச்சரித்து விட்டதாகவும், இந்த தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும் என்றும் கூறியுள்ளார்.

Night
Day