மாவோயிஸ்டு அச்சத்தால் சோதனை - காவல்துறை விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்சங் ஊழியர்கள் சென்ற பேருந்தை வழிமறித்து அவர்களின் அடையாள அட்டையை காவல்துறை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்கள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை செய்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தொழிற்சங்கம் அங்கீகாரம்,போனஸ் ,ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து நேற்று 26 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் பல்வேறு வாகனங்களில்  வர தொடங்கினர்.அப்போது சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கைகள் ஈடுபட்ட போலீசார்  தொழிலாளர்களை மடக்கி, அடையாள அட்டைகளை பரிசோதனை செய்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து அவா்கள் வன்முறை போராட்டமாகவும், அரசுக்கு எதிரான போராட்டமாகவும் திசை திருப்ப முயலுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் உண்மையான சாம்சங் கம்பெனி தொழிலாளா்களை போலீசாா் தடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். 

Night
Day