மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்சின்னம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நங்கூரமிட்ட நிலையில், மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல்சின்னம், நாகையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 480 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்கு மேல், நாளை காலைக்குள் புயலாக வலுப்பெறும் என்றும், தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதிகளில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

Night
Day