மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டிய தங்கம் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று மேலும் 280 ரூபாய் அதிகரித்து, 54 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் அதிகரித்து, 102 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day