மீன்பிடி தடைக்காலம் என்பதால் தூத்துக்குடியில் மீன்களின் விலை கடும் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ சீலா மீன் ஆயிரத்து 300 ரூபாய் என விற்பனையானது.
 
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடர் விடுமுறை என்பதால் திரேஷ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ சீலா மீன் கிலோ ஆயிரத்து 300, விளைமீன், ஊழிமீன், பாறை தலா ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய், நகரை ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்பனையானது. இதே போன்று நண்டு ஒரு கிலோ 600 ரூபாய், கேரை, சூரை, குறுவளை மீன்கள் ஒரு கிலோ தலா 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனையானது.

Night
Day