முகுந்தன் நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை - ராமதாஸ் திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக தலைவர் அன்புமணி உடனான கருத்து வேறுபாடு சரியாகி விட்டது என்றும் பாமக இளைஞர் சங்க தலைவராக முகுந்தனே இருப்பார் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூறினார். முதலைமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும், தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்து கிடப்பதாகவும் கூறிய டாக்டர் ராமதாஸ், விளம்பர திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணியுடனான கருத்து வேறுபாடு சரியாகி விட்டது என்றும் பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிப்பார் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

Night
Day