எழுத்தின் அளவு: அ+ அ- அ
மரக்காணம் முடங்கி மேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, இப்பகுதியில் அடிப்படை தேவைகளை கூட திமுக அரசு செய்யவில்லை என்றும், மரக்காணம் பகுதிக்கு செல்லக்கூடிய வழியில் பாலம் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னமாவிடம், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். மேலும், கடந்த மூன்று நாட்களாக குடிநீர், மின்சாரமின்றி தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். முடங்கிமேடு மக்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் உள்ளிட்டவற்றை வரவழைத்து விநியோகித்ததாக தெரிவித்தார். ஆனால், கடந்த 3 நாட்களாக குழந்தைகள் பசி, பட்டினியுடன் வாடுவதற்கு திமுக அரசே காரணம் என குற்றம் சாட்டினார்.