முதல்முறையாக தமிழகத்தில் இந்தியில் வானிலை அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழகத்தின் வானிலை அறிக்கையை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களின் வானிலை நிலவரங்களை அறிக்கையாக தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தினமும் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும், மழை இருப்பின், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மழை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கையை தற்போது இந்தியிலும் படிக்க முடியும். 

தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Night
Day