முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பாஜக பிறந்தநாள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக பாஜக சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்காக திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட நாளிதழ் விளம்பரத்தில் பிரதமர் மோடி, ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. பின்னணியில், ராக்கெட் படம் ஒன்றில் சீன நாட்டின் கொடி இருந்ததால் இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கிண்டல் செய்யும் விதமாக, ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக தனது X வலைத்தளப்பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. முதல்வருக்கு பிடித்த சீன மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Night
Day