எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் முதியவரின் வீட்டை திமுக பிரமுகர் அபகரித்து அட்டூழியம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள நாராயணசாமி தோட்டம் முதல் தெருவில் வசித்து வரும் கோபிநாத் என்ற முதியவரின் வீட்டை தென் சென்னை மாவட்ட திமுக பிரதிநிதி அசோகன் தனது மகன் மற்றும் சகோதரிக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் ஒரு மாதம் மட்டுமே வாடகை கொடுத்து விட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கொடுக்காமல் ஏமாற்றி அராஜகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வாடகைக்கு வந்த வீட்டை வேறு நபர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கு லீசுக்கு கொடுத்து அந்த பணத்தையும் அபகரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதில் உடனடியாக அரசு தலையீட்டு வீட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட முதியவர் கோபிநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.